கரிசல் மண்ணில் ஒரு காவியம்7

கரிசல் மண்ணில் ஒரு காவியம். 7
அத்தியாயம் 7
நல்ல வேளை அந்தக் கல் கிழவியின் காலை மட்டும் காயப்படுத்தியது.இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.கமலாவின் அப்பா ஒரு பெரிய வீச்சரிவாளோடு வேகமாகப் பாய்ந்து வந்தார்.அரிவாளே தொட்டும் பாராத அந்த மனிதர் கொலை வெறிக் கோபத்தோடு கொதித்து வந்தார்.ஊரே கூடிவிட்டது வேடிக்கை பார்ப்பதற்கு.கமலாவின் அப்பாவை அக்கம் பக்கம் நின்றிருந்தவர்கள் அவரைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.
“உங்க அம்மாவுக்குதான் ஒன்னும் ஆகலில்ல”என அவரை சமாதானப் படுத்தி அரிவாளைப் பிடிங்கிக் கொண்டார்கள்.
“அட விடுங்கய்யா அந்தக் கல்லு எங்கம்மா தலையில விழுந்திருந்தா என்ன ஆயிருக்கும்.அவ செத்திருந்தா உசுர யாருய்யா குடுப்பா.இன்னிக்கு இந்தப் பயல ரெண்டுல ஒன்னு நாங் பாதுர்ரேன்.டேய் உன்னைய சும்மா விட மாட்டண்டா. உன்னப் போலிசில மாட்டிவிட்டு என்ன பண்றேன்னு பாருடா.
நீ வாம்மா போலிசுக்குப் போகலாம்.”எனக்கூறி காவல் நிலையத்திற்குப் புறப்படத் தயாரானார்கள்.

அப்போது ஒரு பெரியவர் குறுக்கிட்டார்.”யோவ் முத்துச்சாமி கொஞ்சம் பொறுமையா இருமைய்யா.போலிசு அது இதுன்னு போனா பல பல பிரச்சனைகள் வருமையா.போலிசுக்குப் போனா பிரச்சன முடிஞ்சிருமா?அவங் வந்து என்ன பண்ணுவாங் அங்குட்டு ஆயிரம் இங்குட்டு ஆயிரமுன்னு புடுங்கிக்கிட்டு மேலும் மேலும் பகையத்தான் வளத்து விடுவான்.அதெல்லாம் வேண்டாமய்யா எல்லாம் பேசித் தீதுக்கிடலாம்.ஊர் பஞ்சாயத்துன்னு ஒண்ணு இருக்குல்ல.அதுல பாத்துக்கலாம்.”என அந்தப் பெரியவர் சமாதானப் படுத்தினார்.இன்னும் கூட்டம் கூடி விட்டது.

இன்னொருவர் கூட்டத்தை துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.”யோவ் என்னய்யா பேசுறீங்க!அந்தக் கல்லு படாத இடத்தில பட்டு அந்தக் பெரியம்மாசெத்திருந்தா என்னய்யா ஆயிருக்கும்.கொலகாரப்பாவி ஒரு கொலை செய்ய முயற்சி பண்ணியிருக்காங் அவன ஊருக்கூட்டம் போட்டுப் பாராட்டப் போறீங்களா!இதுக்கெல்லாம் போலிசுக்குப் போனாதாங்யா சரியா வரும்..நீ வாண்ண போலிசுக்குப் போலாம்.”அவர் எரியிற தீயில எண்ணையை ஊற்றினார்.

அப்போது வெள்ளை மீசைக்காரர் ஒருவர் நிதானமாக பொறுப்போடு பேசினார்.
“இந்தா பாரு முத்துசாமி நாங் சொல்றதக் கேளு !ஓங் வீட்ல ஒரு வயசுக்கு வந்த பொட்டப்புள்ள இருக்கு.போலிசுக்குன்னு போகும்போது விஷயம் பெருசாயிரும்`.போலிசுன்னு போனா பேப்பர்ல வந்துரும்.வெளியூருக்கெல்லாம் தெரிஞ்சா ஒவொருதரும் ஒவ்வொரு விதமா பேச ஆரம்பிச்சுருவாங்க.போலிசும் வேண்டாத கேள்வியெல்லாம் நோண்டி நொண்டிக் கேப்பாங்க அப்புறம் அசிங்கமாப் போயிர்ம்பா.அவனும் அப்படிப் பையன் இல்லப்பா.உங்க அம்மாவுக்கும் பேசத் தெரியலப்பா .பெத்த தாயப் பத்தி தப்புத் தப்பாப் பேசினா யார்தான் பொறுத்துக்கிட்டு இருப்பாங்கப்பா.சரி வா கூட்டதில பேசிக்கலாம்”என நியாயம் பேசி முத்துசாமியின் கோபத்தை தணித்தார்.

கோபம் தணிந்த முத்துசாமி “கிழவி வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான.”
அம்மாவின் மீது ஆவேசமானார்.
“அட விடப்பா !அம்மாவ ஆஸ்பதிரிக்கிக் கூப்புட்டுப் போக வழியப்பாரு.
டேய் மாரிச்சாமி!வண்டியப்போடுரா!ஆச்சியை ஆஸ்பதிரிக்கிக் கூப்புட்டுப் போகலாம்.”எனப் பெரியவர் முடித்ததும் நிலைமை சாகச நிலைக்குத் திரும்பியது.மாட்டு வண்டியும் தயாராகி வீட்டு வாசலுக்கு வந்தது.ஆச்சியைத் தூக்கி மாவண்டியில் ஏற்றினார்கள்.

அப்போது இன்னொருவர் “ஏம்பா முத்துசாமி இன்னொரு முக்கியமான விஷயம்பா!இந்தக் காயம் எப்படி ஏற்பட்டதுன்னு ஆஸ்பத்திரியில கேப்பாக.அப்ப சண்ட அது இதுன்னு உளறிக்கொட்டியிராத/அம்மா வீட்ல மாவாட்டிட்டு ஆட்டுக்கல்ல வெளிய எடுத்துக் கழுவும் போது அந்தக் கல்லு தவறி காலுல விழுந்திருச்சி.ன்னு உண்மைய மாத்திச்சொல்லு.புரிஞ்சதா.

னின்
முத்துசாமியும் தலையை ஆட்டினார்.வண்டியும் கிளம்ப ஆரம்பித்தது,மாரிசாமி ,”ட்டர ....தே ..தே”என வண்டியில் பூட்டிய மாட்டை புறப்பட ஆணையிட்டார்.வண்டி மெல்ல நகர்ந்தது.

திடீரென ஒரு முரட்டுக்குரல்.நிப்பாட்ரா வண்டிய “என வண்டியை வழி மறித்து நிறுத்திய வேகத்தில் நேரா ராசாவிடம் போனார்.யாரும் எதிர்பாராத
திருப்பமாக ராசாவை சட்டையைப் பிடித்து அப்படியே அலாக்காத் தூக்கினார்

(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.
. .
அடுத்து வெளியீடு 1/2/2014

எழுதியவர் : சிறு கதை (26-Jan-14, 12:29 am)
பார்வை : 126

மேலே