தவிக்கும் நெஞ்சங்கள்
வேற்று நாட்டிலே வாழ
வேற்று இனத்துடன் வாழ
வேற்று மொழி பேச
வேற்றுக் கலாச்சாரம் புரிய
வேற்று பழக்கங்கள் புக
வேற்றுமையே வாழ்க்கையாக
வாழ வேண்டிய நிமித்ததிலும்
விட முடியவில்லை எவ்விதத்திலும் என்னால்
நம் தாய் மொழியை தேன் தமிழை
நம் உடையை அதன் அழகை
நம் மத வழக்கத்தை குங்குமத் திலகத்தை
சற்று வேறுபாடாகத் தோன்றும்
இன்று நம் நாட்டிலே ஓட்டும் திலகம்
வழக்கத்தில் வந்து விட்ட நேரத்தில்
என் போனற சிலர இன்றும் மஞ்சள் குங்குமத்தை நாட
நம் உணவை சைவ முறையை
மறக்க முடியவில்லை நம் இட்லியை
நினைவுக்கு வரும் நம் வற்றல் குழம்பை
குடியேறிய நாட்டில் அடைகிற பணப் புழக்கத்தை
பிறந்த நாட்டிலே கிட்டும் உணர்வை ,பற்றுதலை
எது பெரிது என்று அறிய முடியாமல் தவிக்கும்
நெஞ்சங்களுக்காக ஆதங்கத்துடன் எழுதும் வரிகள்.