காதல் சொல்ல வருகிறேன்

உன் புன்னகையில் என் மூச்சுக்காற்றாய்
உன் முந்தானை பின்னே தொருதடி

நீ சேலைக் கட்டிவரும் அழகில்
என் சோலை மனமும் இன்று பருத்திக் காடாய் மாற ஏங்குதடி

மஞ்சக்காட்டு மானே
என் மனதை நீ ஏனோ பறித்துவிட்டாய்

நான் இப்போது பாழடைந்து நிற்கிறேன்
உன் பார்வையில்
விழுந்து எழுந்து நிற்கிறேன்
போக வேறு வழி தெரியவில்லை

உன் புன்னகையுடன் என் புன்னகை கலந்திட காத்திருக்கிறேன் உன் பின்னே தொடர்ந்து வருகிறேன் தினம் தினம் என் காதல் சொல்ல.

எழுதியவர் : ரவி.சு (27-Jan-14, 10:04 am)
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே