சருகாய் போன நெஞ்சம்

காலையும் மாலையும் காத்திருந்தேன்
கல்லுரி வாசலிலே...
சாலையிலும் சோலையிலும் நின்றிருந்தேன்
கண்ணே நீ வருகையிலே....
உன் ஒற்றை பார்வையிலே
என் உயிர் உருகுதடி...
அன்பே உன் சிரிப்பினிலே
என் ஜுவன் வாழுதடி...
என் நிலவே உன் முகம் பார்க்க
நித்தம் நெஞ்சம் ஏங்குதடி...
என் குயிலே உன் குரல் கேட்க
எந்தன் செவி துடிக்குதடி...
நீ பார்த்த பார்வைக்கு நெஞ்சம்
கோடி நன்றி சொல்லுதடி...
நீ பார்க்காமல் போகையிலே நெஞ்சில்
இடி வந்து இறங்குதடி....
நீ செல்லும் இடமெல்லாம்
சொல்லாமல் வந்தேனடி....
இன்று நான் செல்லும் இடத்திற்கு
சொல்லாமல் போகிறேனடி....
உன் அழகான பார்வையிலே
பூவானது என் உள்ளம்...
உன் இதழின் வார்த்தையிலே
சருகாய் போனது என் நெஞ்சம்...