வாழ்ந்தால் என்ன

பழம் வேண்டும்
பால் வேண்டும்
பாயசமும் வேண்டும்
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு

நீ வேண்டும்
நான் வேண்டும்
நாலும் வேண்டும்
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு .

அது வேண்டும்
இது வேண்டும்
ஆவதெல்லொம் வேண்டும்
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு .

அறிந்தது வேண்டும்
அறியாததும் வேண்டும்
அழகானது வேண்டும்
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்கு .


எனக்கு வேண்டும்
எனக்கே வேண்டும்
என்ற நினைப்போடு
வாழும் நாம்
எதற்கு வாழ்கிறோம் ?

பண்டத்துக்கும், பகட்டுக்கும்
அழியும் அழகுக்கும்
அழிகின்ற பொருளுக்கும்
தனக்கே என்று வாழும் நாம்
வாழ்ந்தால் என்ன !
வாழா விட்டால் என்ன !

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-Jan-14, 7:54 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : vaazhnthaal yenna
பார்வை : 165

மேலே