வெற்றி
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்வு என்ற நாமத்தில்
வாழ்வதற்காக
வாழ பிறந்த புண்ணிய ஜீவன்கள் யாம்
உலகில் மலர்தது முதல்
உதயமானது எம் வெற்றி
பாடசாலை வாசல் மிதியாதோர் பலர்
பாடப்புத்தகம் கையில் எடுக்கதோர் பலர்
பாச உறவு இல்லாது துடிக்கும் ஜீவன்கள் பலர்
பாலே அருந்தாத குழந்தைகள் பலர்
ஆசைகள் ஒன்றாவது நிறைவேராதோர் பலர்
ஆதரவு காட்ட நட்பே இல்லாதோர் பலர்
அன்னை எனும் உறவு இல்லாதோர் பலர்
அக்கம் பக்கம் கூட செல்லாதோர் பலர்
காட்சிகளை காண முடியாதோர் பலர்
கால் நடவாதோர் பலர்
கானம் கேட்க முடியாதோர் பலர்
தினம் தினம் இன்பமே காணாதோர் பலர்
திக்கே தெரியாதோர் பலர்
தினம் தினம் அனு அனுவாய் துன்பத்தை
அனுபவிப்போர் பலர்
இப்படி எத்தனை எத்தனை உயிர்கள்
இவ்வுலகில் வாழ்வதை போல் சாகின்றன
இவை தான் தோல்வி
இதை தாண்டியே நீங்கள் ......................?
வெற்றியின் முத்துக்கள்
வெல்லுவது மட்டுமல்ல
வெற்றி, இன்பமாய் வாழ்வதே பென்னம்பெரிய
வெற்றி தோழா
இனி கண்ணீர் வேண்டாம்
இது சிறு விடயம் என ஆறுதல் கொள்ளும்
இதமான மனம் ஒன்று மட்டுமே போதுமடா
இந்த உலகை வெற்றிக் கொள்ள
இனி அனைத்து வெற்றியும் உனதே தோழா.