நீ ஒரு பூகோளம்

பூக் கோலமிடும் பெண்ணே
நீயும் ஒரு பூகோளம்
உருண்டு திரண்டது
பூமி மட்டுமல்ல
நீயும் தான்...
பூமியின் தோற்றம்
எத்துனை வியப்போ
உன் தோற்றமும் அப்படி தான்
பூமியின் காடுகள்
உன் கருங்கூந்தல்...
பூமியின் மலைகள்
உன் பருவ மேடுகள்
பூமியின் கடல்கள்
உன் கண்களின் நீர்த்துளிகள்
பூமியின் பசுமை
உன் வாலிப செழுமை
நான் பூகோள மாணவன்
நீயே என் ஆய்விற்கு....
உரிப் பொருளும், கருப் பொருளும்

எழுதியவர் : சித்ரா ராஜ் (30-Jan-14, 4:13 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 63

மேலே