என் கோவிலில் தெய்வம் நீயடி தாயே

என் கோவிலில் தெய்வம் நீயடி! தாயே...........

^
/ |
/ |
(__|__)
[^^^^^^^^^^^^^^^^| |^^^^^^^^^^^^^^^^^]
| |
|__________________________|


தாயே!
உன் கரங்களால்
என்னை கட்டி
அணைத்தாய்,

உன் மார்பின் மீது
தூளி கட்டினாய்,

பத்து திங்கள்
உன் கருவறையில்
வாடகை இல்லாமல்
இடம் கொடுத்தாய்,

என்னை பெரிய
பொக்கிசம் என்று
நினைத்தாய்,

தாயே!
உன்மடியில்
தவழ்ந்த எனக்கு நீயே
என் பொக்கிசமடி...

காலம் காலமாய்
வாழ்ந்தாலும் உன்
பாசத்திற்கு நிகரேது தாயே!

கோடி ஆண்டுகள்
வாழ்ந்தாலும் உன்னுடன்
கூடி வாழ வேண்டும்

இன்னும் எத்தனை பிறவி
எடுத்தாலும் உன் பிள்ளையாய்
பிறந்து உன் மடியில் தவழ
எனக்கு சிறு இடம் வேண்டும் தாயே!

கோவிலுக்கு சென்ற நான்
கற்சிலை கடவுளை தொழுகிறேன்
"சாமி" நீ இருப்பதை மறந்து...

என் இதய துடிப்பாக
வாழ்கிறாய் என் உயிர்
மூச்சு உள்ளவரை .....

எப்பிறப்பிலும் உன் மகனாக

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (30-Jan-14, 4:27 pm)
பார்வை : 183

மேலே