எழுதப்பட்ட கவிஞன்
காட்சிகளை வர்ணித்தேன் ....
வார்த்தைகளின் நடனத்தில்
மயக்கம் கொடுததேன்...
எதுகை மோனையுடன்
சரம் தொடுததேன்...
சிந்தனையில் கருத்தூட்டம்
கலந்தூட்டி னேன்..
உணர்ந்ததை ,சுவைபட
உணர்த் த முயன்றேன்..
மனங்களில் எழுதி
பதியன் போட்டேன்
'கவிஞன் ' என்றார்கள்...
ஆனால்
நயம்பட நானிலத்தில்
நிலைப்பதை எழுதியவனே
....'எழுதப்பட்ட கவிஞன்.'...
என்றல்லவா..
இலக்கியம் நகர்த்துகிறது..!