நெடு நாள் வாடை

நெடுநல்வாடை படித்த நமக்கு
நெடு நாள் வாடைத் தெரிய
நகர பேருந்து நிலையம் போதும்
ஊர்களின் பெயர்கள் தான் வெவ்வேறு...
வீசிடும் மூத்திர வாடை ஒன்றே..
காட்டான் எனறு சொல்லும்
கிராமத்தான் வெட்கி, தயங்கி
ஒதுக்குப்புறம் தேடுகிறான்
படித்த பண்டிதர்களாய் காட்டிக் கொள்ளும் பக்கிகள் தான்
வெட்கம் சிறிதுமின்றி
மாடர்ன் ஆர்ட் வரைகிறார்கள்
பேருந்து நிலைய சுவர்களில்...
சிறு நீர் சித்திரங்கள் என்று
நாமகரணம் சூட்டிடலாம்....
வெற்றிலை குதப்பிய எச்சில்கள்
தூக்கிய வீசிய பிளாஸ்டிக் குப்பைகள்
சங்கீதம் பாடும் கொசுக்கள்
ரீங்காரமிடும் ஈக்கள்
குடல் பிடுங்கும் நாற்றம் என
அந்த நெடு நாள் வாடை
மாறாத சாபம்...
நாம் செய்த பாவம்
மேற்கத்திய கலாச்சாரம் தெரிந்த நமக்கு
மேல் நாட்டு தூய்மை
தெரிவதில்லை.....
துர்வாசம் நம் நாட்டின சாபம்
விமோசனம பெற வழியில்லையோ்
?

எழுதியவர் : சித்ரா ராஜ் (30-Jan-14, 9:30 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : nedu naal vaadai
பார்வை : 102

மேலே