நட்பா காதலா

பேசியதுமில்லை
நண்பர்களுமில்லை
இருந்தும் பரிமாறிகொண்டோம்
என்ன பரிமாறிகொண்டோம்
என்பதும் தெரியாமல்....

நீ செய்ததையெல்லாம்
நான் ரசித்தேன்
நான் செய்ததெல்லாம்
நீ ரசித்தாய்
நம் இருவரையுமே நாம்
ரசித்தோம்
எதை ரசிக்கிறோம்
என்பது கூட அறியாமல்...

உன் வரவை அறிவதில்
முனைப்புடன் இருந்தேன்
என் வரவை அறிவதில்
நீயும் அவ்வாறே இருந்திருப்பாய்
என்றே தோன்றுகிறது
காரணமே இல்லாமல்...

இதயங்கள் மட்டும்
பேசிக் கொண்டன
இறுதி வரை நாம்
பேசிக் கொள்ளவே இல்லை
ஏனென்று தோன்றாமல்...

நம் மனசுரங்கத்துக்குள்
புதைந்து போன
யாவும் போல்
நாம் நண்பர்களா ?
இல்லை காதலர்களா ?
என்பதும் புதயட்டும்
அர்த்தமில்லாமல் ...

எழுதியவர் : பெருமாள் (31-Jan-14, 3:50 pm)
பார்வை : 125

மேலே