விரைந்து வா உயிர்த்துப்போ

விரைந்து வா... உயிர்த்துப்போ...

காத்திருக்கும் கணநொடிகள்
கானலாய் சுட்டெரிக்குதடி...
நிலவொளியில் நிதமுன்னை
ரசித்திடவே நின்மனமும்
ஏங்குதடி...
சுழலும் பூமியும்
சுட்டெரிக்கும் சூரியனும்
உன் மௌனத்தை கலைத்திடாதோ?
நானுமிங்கே உன்னினைவால்
தூக்கம் தொலைத்து,
துன்பத்தில் உழன்று,
பசியென் றொன்று உண்டென்பதை
என்னுடலும் உள்ளமும் மறந்தே போனதடி...
என்மொத்த உயிரும் உன்னிடத்திலே...
மெத்தனமாய் இருந்தென்னை
மொத்தமாய் உலகைவிட்டு அனுப்பிவிடாதே...
நூலிழையில் இருக்குமென் உயிரை
உன் மௌனம் கலைத்து
என்னிடத்திலுள்ள உன்னுயிரை
எடுத்துக்கொள்ள விரைந்து வா
கண்மணியே....

*சுபாவின் கிறுக்கல்கள்*

எழுதியவர் : சுபா பூமணி (31-Jan-14, 5:52 pm)
பார்வை : 61

மேலே