என் ஜாதகம்
என் ஜாதகத்தில்
எட்டாமிடத்தில் செவ்வாய் என்று
அம்மாவிற்கு வருத்தம்!
எட்டாத இடத்தில்
நீ இருப்பதில்
எனக்கு வருத்தம்!
ஏழில் ராகு என்று
அப்பாவிற்கு கவலை!
நீ இல்லாத வாழ்வு பாழ்
என்று என் கவலை !
பன்னிரண்டு கட்டத்தையும்
பரிகாரத்தையும்
பார்க்கும் அப்பா_அம்மா
பக்கத்து வீட்டில் இருக்கும்
உன்னையும்
உன்னையே பார்க்கும்
என்னையும்
கவனிக்க தவறியதேன்...?