வேண்டும் வேண்டும் வேண்டும்

மறந்தும் உறவை மறவா மனம் வேண்டும்
மழையில் நனைந்தும் மறையா மணம் வேண்டும்
இரந்தும் பிறருக்கு கொடுக்கும் குணம் வேண்டும்
இறக்குமுன் நோயில்லா வாழ்வு தினம் வேண்டும்

கறக்கும் பசு வேண்டும்-ஆசைகள்
துறக்கும் திசு வேண்டும்
சிறக்கும் கவி வேண்டும் -வளங்கள்
பிறக்கும் புவி வேண்டும்

மயக்கும் காலை வேண்டும் -பசுமை
கொழிக்கும் பாலை வேண்டும்
வழுக்கும் சாலை வேண்டும்- -பூக்கள்
சிரிக்கும் சோலை வேண்டும்

கடிந்து சொல்லா சொல்வேண்டும் -திறம்
ஒடிந்து போகா வில்வேண்டும்
உடைந்து சாகா பல்வேண்டும் -என்றும்
தளர்ந்து வாரா தில் வேண்டும் .....வேண்டும்....வேண்டுமே.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-14, 8:40 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 42

மேலே