அதிகாலையில் ஒரு அன்பான வாழ்த்து

அன்பான தமிழ் சொற்கள் வைத்து
அருமையாகத் தயார் செய்யப்பட்ட
ஆசீர்வாத அட்சதைகள் - இதோ
அதிகாலையில் பூமியில் விழும்
அருமையான கதிர் ஒளிகள்.........
வாழ்த்தில் நனையலாம்
வாருங்கள் - நம்
வாழ்க்கை இனிமையாகும்
பாருங்கள்