மனை மாட்சி

எட்டிப் பார்த்திடும் காமம்
என்றனை வென்றது மெல்ல
கொட்டித் தீர்த்திட வேண்டிக்
கூடினேன் மாதினை ஓர்நாள்
விட்டுப் பிரிந்ததும் என்னைத்
தொற்றிய தேஉயிர்க் கொல்லி
மட்டில் லாத்துயர் நெஞ்சை
வாட்டிவ தைத்திடும் நாளும்…

பாயில் இன்பமும் வேண்டிப்
பரத்தைய ரோடுற வாடி
நோயில் வீழுதல் நன்றோ
நொந்தவன் சொல்லினைக் கேட்பீர்
வாயில் புன்சிரிப் பேந்தும்
விலைமகள் சேர்ந்திட வேண்டா
தாயின் மறுவடி வான
தன்மனை கூடுதல் நன்றே!

எழுதியவர் : அகரம் அமுதன் (3-Feb-14, 7:21 am)
பார்வை : 64

மேலே