முகநூல்
முகநூல்
------------
வெற்றிடமாய் வெளிவந்து நம்
எழுத்தின் மொழி கற்று
புன்னகையை படமெடுத்து
புவிஎங்கும் வலம் வந்து
முகமறியா உறவினையும்
அகம் மலரச் செய்யும்
உறவுக்கு கரம் கொடுத்து
நட்புக்கு உயிர் வழங்கும்
முரண்பட்ட முன்னுரை
மொழிசாரா தொகுப்புரை
பதிப்புரைகள் பங்கேற்பால்
பார் போற்றும் புகழுரை
அகம் நூற்கும் அர்ப்புதமாய்
அன்புடன் நம் முகநூல்
இடைமரிப்பர் இல்லாவிடில்
இதுவன்றோ சிறப்பின் சிறப்பு.....!