வருகை
நீயும் நானும்
கைகோர்த்து
நடந்த பாதைகள்..
இன்று நம்
காலடித்தடத்தை
எதிர்பார்த்து
நீண்டு கிடக்கின்றன..
உனக்காக நான்
காத்திருந்த மரத்தடி,
இலைகள் உதிர்ந்தும்
நமக்காக
நின்று கொண்டிருக்கிறது..
நாமிருவரும்
பயணித்த
பேருந்தின் இருக்கைகள்.
தவிக்கின்றன
நம்மை சுமப்பதற்காக..
சாலையோர பாட்டி கூட
தேடுகிறாள்
உனக்கு நான்
பூ வாங்கித்தரும்
தருணத்திற்காக..
நம்மை காணாமல்
காத்திருந்த
காதல் பறவைகள்.
குரல் வற்றித் தவிக்கின்றன..
உனக்காகவே
தன கனவுகளை
துரத்திவிட்டு
சீக்கிரமாகவே விடிகின்றன
என் இரவுகள்..
இவற்றோடு,
உன் ஒருத்திக்காகவே
இன்னமும்
துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயம்..
இவைகளிடம் சொல்வதற்கு
எனக்கு தைரியமில்லை..
இனி நீ
வரப்போவதில்லை என்று...!