இது ஒரு காதல் கதை

மாடியிலே நின்றபடி அவள்
மயிலெனவே எனைப் பார்க்க
மல்லிகைத் தூண்டிலிலே
மாட்ட என் விழி உணர்ந்தேன்....

மெல்லவே எனைத் தூக்க என்
மேனி இறகாய் மாறுகிறதே...
மென்மையுறு காதல் பார்வையை விட
மேதினியில் வேறு என்ன இன்பம் ?!

மெருகேறுது முதுமை இந்நொடி
மீண்டும் மீசை அரும்புவதாய் உணர்ந்து
மெல்லவே அருகில் பார்க்கிறேன்...
மெல்லிய புன்னகையோடு.....

அவளைப் பார்த்து சிரித்தபடி குறும்பாய்
ஆணழகின் உருவாய்
அவளது காதலன்.........

என் மண நாளுக்கு முந்தைய நாளில்
எழில் நிறைந்த என் தோற்றத்தின் நிழலாய்....

ஒரு நொடி தெரிந்து மறைய.....

தொடர்கிறேன் கைத்தடியின் துணையோடு....

வீட்டிற்குள் நுழைந்தபோது.....

போட்டோவுக்குள் புன்னகைத்த என்
வயதான மனைவி......

நேரத்தோடு வீட்டிற்கு வரமாட்டீர்களா
என்று அன்போடு அதட்டுவதாய் உணர்ந்து....

அமைதியாக அமர்கிறேன் சாப்பாட்டு மேஜையில்
தனியாக......

நிசப்தமே உனக்காவது தெரியுமா

நேற்றைய எனது காதல் கதை......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Feb-14, 6:25 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 67

மேலே