நிலவில் அமைந்த பூந்தோட்டம்

நீ சிரித்த போது கண்டேன்
நிலவில் அமைந்த பூந்தோட்டம்.....!!

நெருங்கி கொஞ்சம் உறுதி செய்தேன் - அட
நிஜமாய் கவிதையின் தேரோட்டம்..!!

காலமெலாம் நீ இப்படிச் சிரித்தால்
காமனுக்கும் உறக்கம் போராட்டம்....!!

கட்டழகில் நீ மெட்டமைக்க இந்தக்
கவி மனதில் காதல் கொண்டாட்டம்....!!

கட்டியமனைவி படித்து விட்டால் இந்தக்
கவிதையால் எனக்குத் திண்டாட்டம்...!!

கண்ணெதிரே மத மதக்கும் மத்தாப்பூவே
கவிக் கள்ளுண்டே மயங்குகிறேன் வண்டாட்டம்.!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Feb-14, 5:52 pm)
பார்வை : 92

மேலே