பிப்ரவரி 14

உன்னை மறப்பதற்கான
துரித பணியில்
துள்ளியமாய் செயல்படும்
இதயம்..!!

மறந்துவிட்டதாய்..
மரணித்துக்கொண்ட
உணர்வுகளின் பிதற்றல்
ஒருப்பக்கம்!

காதல் என்றாலே
காதடைத்துக்கொண்டு
காணாமல் போகும் கனவுகள்..
கண்ணீருக்கிடையில்
கரவோசம் எழுப்புகின்றன!

உயிரடங்குச் சட்டத்தின் கீழ்
உறங்கிக்கொண்டிருக்கும்
உள்ளச்சிறையை..
உன்னைப்பற்றிய நினைவுகளால்
உரசிச் செல்லும் தென்றல்
உசிப்பிவிட்டு ஊர்வலம் போகின்றது!

நழுவிச்செல்லா உன் நினைவையும்,
நாமாகிப்போன நாட்களையும்,
நகைத்துக்கொண்டே நகரச்செய்கின்றன
நாள்தோறும் நாட்காட்டிகள்!-அவற்றை
கிழித்தெரிகையில் கிழிஞ்சல்களுக்கிடையே
கிழறியெழும் கீர்த்தனுமும் கூட
கீறிவிடுவதும் கிண்டி எடுப்பதும்,
கிட்டாத உன் காதலைத்தான்!

தவிப்பெனும் தொழிற்ச்சாலையில்
தானாய் ஈன்றெடுத்த
தடிப்பான முகமூடியை
தவறாமல் அணிந்துக்கொண்டு
தத்ரூபமாய் நடிக்கப்பழகியதை
தப்பென்று உரைப்பாயோ?

பழகியத் தோஷத்திற்காக
பத்து முத்தங்கள்-உன்
பாழாய்ப்போன படத்திற்கு
பாவப்பட்ட மனதின்
பரிசாக பதிந்துப்போகும்!

இறந்த இதயத்தை
இரவல் கொடுப்பது
சிறந்த செயலன்றென
இசைப்பாடும் இவளுக்கு
பிப்ரவரி பதினான்கு
பிறந்தாலென்ன??

இறந்தவை இறந்தவையாக
இழந்தவை இழந்தவையாக
இடி முழக்கமிடும் இதயத்தில்
பிப்ரவரி பதினான்கு
பிறந்தாலென்ன??

காதல் என்றாலே அதைச்
சாதல் எனக்"கொல்லும் "
செவிகளுக்கிடையே...
பிப்ரவரி பதினான்கு
பிறந்தாலென்ன??

நேசமேன்றாலே..வேசமென
வியாபிக்கும் விழிகளுக்கிடையில்,
பிப்ரவரி பதினான்கு
பிறந்தாலென்ன??

பிரிந்தே தொலைத்தப்பின்..
பிப்ரவரி பதினான்கு
பிறந்தாலெமக்கென்ன?

எழுதியவர் : தமிழின் மகள் ஹேமலதா (3-Feb-14, 5:38 pm)
பார்வை : 171

மேலே