நினைவுகள்

உன்னுடன் நான் கழித்த ஒவ்வொரு நாழிகைகளும் என் குருதியோடு கலந்துவிட்ட நினைவுகள்!

உன்னுடன் நான் உரையாடிய ஒவ்வொரு வாரத்தையும் என் மனதில் மையம் கொண்டுள்ள மறைவான நினைவுகள்!

உன் விழிகளுடன் நான் மௌனமாய் உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் இமைகள் பாதுகாக்கும் நினைவுகள்!

நீயும் நானும் கைகோர்த்து நடந்த அந்த நிமிடங்கள் நிழலாய் மறைந்திருக்கும் நினைவுகள்!

உன் மடி மீது நான் சாய்ந்திருந்த ஒவ்வொரு கணமும் மரணத்தின் மடியில் நான் இருக்கும் தருணத்திலும் துறக்க இயலாத நினைவுகள்!

இருசக்கர வாகனத்தில் என் பின்னே நீ அமர்ந்து என்னை இறுக அனைத்த அந்த வினாடிகள் என் இறுக்கமான இதயத்தை இளகவைத்த நினைவுகள்!

அழுத்தமான வார்த்தைகளால் இருவரும் ஏசிக்கொண்ட நாட்கள் என்றும் அழியாத நினைவுகள்!

பிறகு வருத்தப்பட்டு இருவரும் வாடும் நாட்கள் திரும்ப வராத நினைவுகள்!

நாம் சேர்ந்திருந்த நாட்கள் என்றும் தெவிட்டாத நினைவுகள்!

நாம் பிரித்திருந்த நாட்கள் என்றும் உவர்ப்பான நினைவுகள் . . .

எழுதியவர் : பார்த்தசாரதி தெய்வசிகாமண (3-Feb-14, 11:27 pm)
சேர்த்தது : sarathysarathyd
Tanglish : ninaivukal
பார்வை : 109

மேலே