என் செல்ல அம்மாவுக்கு

நேற்று வரைக்கும்

என் அம்மாவிற்காய்
எந்த ஒரு வாழ்த்தையும்
தெரிவித்ததில்லை-இன்று
எதோ ஒரு மூலையில் யாரும்
இல்லமால் தனி மனிதமாய்
பயணித்துக்கொண்டிருக்கிரேன்
அருகிலிருந்த போதெல்லாம்
தெரிந்துகொள்வதில்லை
அம்மா அவள்
உணவு பரிமாறும் போதும்
உடல்நிலை சரியில்லை என்றால்
உபசரிக்கும் போதும்
கடிந்தே விழுவோம்
அவள் கண்கலங்கினாலும்
நம்மிடம் காட்டிக்கொள்ள மறுப்பாள்

எத்தனையோ இரவுகள்
எனக்காய் கண்விழிதிருப்பாள்
கருவுற்றநாளிலிருந்து
இதுவரை தனக்காய்
உண்டதில்லை
உறங்கியதில்லை
இப்போதும்
தொலைபேசியில்
அழைக்கும் போதும்
முதல் கேள்வி
எப்போ வருகிறாய்
என்று தான் இருக்கும்
பிறகு தான் மற்றவை எல்லாம்

நான் தவறு செய்கிறேன்
என்று எவர் சொன்னாலும்
பொருட்படுத்தமட்டாள்
என்னை விட அவளுக்கு
என் மீது நம்பிக்கை அதிகம்


விளையாட ,பேச
நண்பர்கள்
தோழி
காதலி-என
எத்தனையோ உறவுகளை
நமக்காய் உருவாகிக்கொண்டோம்
அவர்களை பொறுத்தவரை
''அ'' வும் நாம் தான் ''அந்தியும்'' நாம் தான்
இத்தனை வருடங்களாய் பிள்ளைக்கல்வி
மட்டுமே படித்துக்கொண்டிருந்தவளை
உலகறிவு போதவில்லை என்று
முதியோர் இல்லக்கல்வி கற்க
அனுப்புகிறான் -நிச்சயம்
அவணறிவு
முடமாகிப்போன முட்டாள்


வாசலில் கடவுளை நிறுத்திவிட்டு
கோடி கொடியாய் உண்டியலில்
கொட்டி வரம் கேட்டலாம்
எந்த ஒரு கற்களுக்கும்
காது கேட்கப்போவதில்லை
நமக்கெல்லாம் எப்படியோ
எல்லா அம்மாக்களுக்கும்
சமையலறைதான் கடவுள்
ஆம்
இந்த கோவிலில் மட்டும் தான்
பக்தர்களுக்கு உணவு படைத்த பிறகே
கடவுள் ஏற்றுக்கொள்கிறது!..

என் செல்ல அம்மாவுக்கு அன்னையர் தின
வாழ்த்துகள்

எழுதியவர் : ரஞ்சித் (9-Feb-11, 11:02 pm)
சேர்த்தது : ranjitheswar
Tanglish : en sella ammavuku
பார்வை : 589

மேலே