எண்ணத்தை வடித்து சிந்தையை மாற்று

வண்ணத்து பூச்சியே...
வட்டத்தை விட்டு வா வெளியே....

கொட்டிக்கிடக்கிறது மண்ணில்! மலர்கள்!
எட்டி பிடித்து விடும் தூரம் தான்!
மது மயக்கதிலிருந்து வெளி வந்தால்
தேன் அமுதம் உனக்கு !

சிற்றின்ப வாழ்க்கை விட்டு
சிறகடித்தே பறந்து பேரின்பம் காண்போம் !

விட்டில் பூச்சியாய் விளக்கை சுற்றி
வாழ்வை மாய்க்கதே !
பட்டாம்பூச்சியே பார்த்திட பாரினில்
நிறைய உண்டு !

விழுந்தது சிறகே ஆனாலும்
கால்களின் துணை கொண்டு
சாதிக்க துடித்திடு !

இழந்தது எல்லாம் ஆனாலும்
புழுவினை போல் உடலால் துடித்தேனும்
இலக்கை எட்டிட போராடு !

உடலால் இருந்திட்டு போகட்டும்...!
ஊனம் மனதில் வேண்டாம்...!!

வானம் கூட ஊனம் தான்!
அதற்கும் அங்கங்கள் இல்லை
ஆனாலும் தினம் தினம் மாற்றம் கண்டு
உயர்ந்தே நிற்கிறது காண்!

மலை முகடுகளை மனிதா நீ !
வெடி வைத்து தகர்த்த போதும்
தளராமல் நின்றே - பிறர்
அவநம்பிக்கையை உடைப்பது காண்!

மரங்களை வெட்டி சாய்திட்ட போதும்
புதிது புதிதாய் அவதாரம் எடுப்பதை காண் !

எத்தனை கழிவுகளை மனிதா நீ
தினமும் கொட்டினாலும்
தன் அழகை புது பொலிவாக்கி காட்டி
அழுக்கை அதனுள் மறைத்திடும் கடல் போலே ...

எண்ணற்ற சிந்தையில் ...
சினம் பல கண்டு இருந்தாலும்
மனசிறையில் பூட்டி வைத்து
மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடு!

அனுபவித்த வலிகளை
குழி தோண்டி புதைத்து விடு !
பிறர் அனுபவிக்க உன்
அனுபவங்களை பகிர்ந்தளி!
நன்மைகள் மட்டுமே செய்திடு!
வண்ணத்து பூச்சியே வாட்டம் போக்கிட வட்டத்தை விட்டு வா வெளியே!

எழுதியவர் : kanagarathinam (5-Feb-14, 6:24 am)
பார்வை : 205

மேலே