விடியல் வருவது எப்போது
 
            	    
                நட்டுவைத்த நாற்றுக்கள் எல்லாம் 
நெல்லாவதில்லை - விளைந்த 
நெல் மணிகள் எல்லாம் -விவசாயியின் 
வீட்டுக்குப் போவதில்லை 
சேற்றின் ஈரம் கையில் 
காயும்  முன்னே -விவசாய 
நிலங்கள்  எல்லாம்  விற்றுப் போய்
வீடு கட்டும் வீட்டு மனைகலாயின 
 உழுதவனோ கஞ்சிக்கு வழி இல்லாமல் 
கட்டிய கோவணமும் களவாடப்பட்டு 
ஓலைக் குடிசைக் குள்ளே 
ஒண்டிக் கொள்ளும் பரிதாப நிலை 
அறிவியல் வந்து பயன் என்ன ...?- அணுவைப் 
பிளந்த ஆற்றலால் ஆவதென்ன .....?
கணினி வந்து கற்றுக் கொடுத்ததென்ன...?
சட்டங்கள் வந்து சாதித்ததென்ன ....?
சாதி மதங்கள் வந்து சாயம் பூசுவதென்ன ..?
வெறும் கனவால் பொழுதுதான் விடிந்தது 
விவசாயிகளின் வறுமைக்கு 
விடியல் வருவது எப்போது ...?-உழுதவனின் 
வயிறு  நிறைவது எப்போது ......?
	    
                
