எழுந்தபின் தெரிவதுண்டோ - மல்லி மணியன்
![](https://eluthu.com/images/loading.gif)
எழந்தபின் தெரிவதில்லை
விழும் போது பட்ட அடி. . .
வளர்ந்தபின் புரிகிறது நம்மை
வரைந்தவர் புரிந்த பணி. . . . . . .
அணைத்த பின்பும் எரிகிறது. நான்
அணைத்த விளக்கு ஒன்று. . .
பிணைத்த பின்பு புரிகிறது
பேதையவள் எண்ணச் சரிகை. . .
கிழித்தபின் திரும்பவில்லை
கழிந்தது வயதில் ஓர் நாள். . .
பிறகு தான் புரிகின்றது
பிறவியின் பிழைதான் என்ன. . .
விடுத்தபின் மீள வில்லை
வாய்மலர் கொடிய விதை. . .
கோவலன் தலை கொன்று
கோமகன் தலை வீழ்ந்த கதை. . .
தடுத்திட யாரும் உண்டோ
தகாத கொடும் செயல்கள். . .
அடுத்தவர் குடி கெடுக்கும்
கொடியவர் கதை முடிவு. . .