மனிதா உனக்கு நீயே

வண்ணமிகு சோலை கண்டேன் !
வந்து போகும் குயில்கள் கண்டேன் !
எண்ணம் பல தோன்ற கண்டேன் !
இயற்கை அன்னை அழகை கண்டேன்!!

நீல வானம் மிதக்க கண்டேன்!
மேகம் யாவும் ஓட கண்டேன்!
தென்றல் தினமும் வீச கண்டேன்!
நதி நிறைய நீர் ஓட கண்டேன்!!

கண்ட இடமெல்லாம் பசுமை கண்டேன்!
வண்ண மயில்களும் ஆட கண்டேன்!
ஓங்கி உயர்ந்த மலைகள் கண்டேன்!
போர்த்திருந்த பனியை கண்டேன்!!

அருவிகளும் ஆர்ப்பரிக்க கண்டேன்!
குருவிகளின் குதூகலம் கண்டேன்!
காடெங்கும் மலர்கள் மலர கண்டேன்!
தேனீக்களும் பறக்க கண்டேன்!!

இயற்க்கை அன்னை மடியில்
கொஞ்சுகின்ற உயிர்கள் கண்டேன்!
புள்ளிமான் கூட்டம்
துள்ளி குதித்து ஓட கண்டேன்!!

வண்ணத்து பூச்சி தும்பியில் அமர கண்டேன்!
இறைவன் படைப்பின் அதிசயம்
பல பல கண்டேன் !

இவையாவும் பணம் ஒன்றை
மனிதன் காணும் முன்னே !

பணம் கண்டான் !எல்லாம் பாழ்!
நடந்திட சோம்பலால்
பிறந்தது மோட்டார் வாகனம்

உழைத்திட சோம்பலால்
இயந்திரம் உழைத்தது
இதயமும் சிறுத்தது
தன் வசதி பெருக்க
அழித்தான் காட்டை...

காடுகள் தோறும் வீடுகள்!
பறவைக்கில்லை கூடுகள்!!

அறிவியல் வளர்ச்சி!
இயற்கையின் வீழ்ச்சி!!

கணினி வந்தது
உடல் சோம்பலை தந்தது!
கைபேசி வந்தது
கதிர்வீச்சை தந்தது!

எத்தனை கண்டு பிடித்தாயோ
அத்தனை பிணி உனக்கு!!
நித்தமும் உருவாகி
உன்னை அழிக்கும் விரைவாக ...

இயற்கையை அழித்து நீ வாழ்ந்தாய் !
உன்னை அழித்திட நீயே உருவாக்கினாய்!!

உணர்வாயோ மனமே !
மடிவாயோ தினமே !

எழுதியவர் : KANAGARATHINAM (6-Feb-14, 2:02 am)
பார்வை : 93

மேலே