நீர்

நிலைமைக்கு ஏற்றாற்போல்
மாற
உன்னிடம் தான் கற்றேன்.,
உன்னை போல்
வளைந்து கொடுக்க
என்னால் முடியவில்லை.,

நெருப்பிற்கு நீ
தோழியா? எதிரியா?
ஏனெனில்
நெருப்பின் கோபத்தை
தணிக்க உன்னை இழக்கிறாய்.,
இதனால்
நீ உயினங்களுக்கு
தோழி ஆகிறாய்.,
நெருப்பிற்கு
எதிரியாகிறாய்.,

சில சமயங்களில்
நீயும் நெருப்பும்
கை கோர்த்து
பல உயிரினங்களை
அழித்தும் விடுகிறாய்.,

பல உயிரினங்கள்
புதுமையாக இருக்க
நீயும் நிலமும்
ஒன்று சேர்கிறீர்கள்.,

காற்றோடு
நீ கொஞ்சம் இணைந்து
இதமான சுகத்தை தருகிறாய்.,

புயலோடு இணைந்து
சோகத்தை அளிக்கிறாய்.,

வெள்ளையில் உறைபனியாக
திடமாய்
எழில் கூட்டுகிறாய்.,

பனியாய் படர்ந்திருக்கும் போது
மஞ்சள் வெயில் படுகையில்
திரவமாய்
பல இடங்களில் சங்கமிக்கிறாய்.,

அதிக வெப்பத்தால்
வாயுவாய்
வானில் இணைகிறாய்.,

வானை கார்மேகமாக்கி
கீழே உதிர்ந்து
அனைத்து சந்ததிகளுக்கும்
உயிராக மாறுகிறாய்.,

பல வேடங்களில்
எல்லா உயிரினங்களையும்
மகிழ்விக்கிறாய்.,
ஒரு வேடத்தை தவிர.,

உலகத்தில் நான்கில்
மூன்று பங்கே..,

இயற்கையின் இரத்த ஓட்டமாய்
நீ இல்லை என்றால்?
இப்புவி....,

எழுதியவர் : sairabanu (7-Feb-14, 2:26 pm)
Tanglish : neer
பார்வை : 157

மேலே