சாய்ராபானு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சாய்ராபானு |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 06-May-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 213 |
புள்ளி | : 31 |
மடிந்தால் நிரந்தர உறக்கம்
இடிந்தால் தோன்றும் குழிகள்
அடி மேல் படிகள் விழுந்தாலும்
துடிப்பை விலையாய் கேட்பார்.
இட்டவை தோள் கொடுக்கும்.
விட்டவை நிம்மதி கெடுக்கும்.
சொட்டும் மழையின் பாதை
நடக்கும் ஆற்றின் ஓடை.
பள்ளமும் வெள்ளத்தால் நிரம்பும்
உள்ளமும் கள்ளத்தால் நிறையும்.
ஆசைகள் மோசம் செய்யும்
அசைவுகள் பாவத்தின் முகங்கள்.
உலகின் நிலை பரிதாபம்
வாழும் உள்ளம் விபரிதம்,
கேட்பவை எல்லாம் கிடைத்ததில்லை
நடப்பவை யாவும் நினைத்ததில்லை.
கண்ணால் காண்பதை நம்பாதே!
விண்ணும் மண்ணில் கரையும்.
ஏழையின் குடிசை சிரிப்பு
நல்ல உள்ளத்தின் இனிப்பு.
இரவுக்கு பகல் துணைதான்
உறவுக்கு பிரிவு இணைதான்.
வெற்றி
----------
யாருடைய வெற்றியும்
எழுதி வைத்து வருவதில்லை!
அது ஈடுபாட்டினால் வருவது...
வெற்றியை சரித்திரமாக மாற்றுவது!
வெற்றியாளர்களின் இயல்புகளை பொருத்தது!
வெற்றியாளர்கள் யாருடைய முதுகையும்
ஏணியாக பயன்படுத்தாமல்
தாமாக தன்னுடைய திறமையை
கொண்டு வெற்றி படியில் ஏறுவார்கள்!
தவறி விழுந்தால்
திரும்ப எழ தெரிந்தவனே!
சிறந்த வெற்றியாளன்!...
வெற்றியின் போது
மனிதனுக்கு
நிதானம்
அவசியமானது,
காரணம்
அவன்
பெற்ற
வெற்றியை
தக்க வைக்கும்
மந்திரம்
அது தான்.
தான் மட்டும் (...)
அட மானிடா, உன் கொள்ளு பாட்டனுக்கும், பாட்டனுக்கும்
பாரதி வார்த்தைகள் புரியலையோ....
அட...தமிழின் எதிர்கால விளை நெல்லே உனக்குமா புரியவில்லை
இங்கே ஜாதியும், மதமும் இல்லையடா..
விஞ்ஞானத்தால் நாம் தூரத்தை நொடியில் நெருங்கி விட்டோம். இருந்தும்
விளக்கமில்லா காரணத்தால் நாம் இன்னும் விலகியே நிற்கிறோம்!!!!!
துணிந்து வா தமிழா, முண்டாசு கட்டிய தமிழன் நம் முன்னால் நிற்கிறான்
உடைத்தெறிவோம் ஏற்றத்தாழ்வுகளை......
அட மானிடா, உன் கொள்ளு பாட்டனுக்கும், பாட்டனுக்கும்
பாரதி வார்த்தைகள் புரியலையோ....
அட...தமிழின் எதிர்கால விளை நெல்லே உனக்குமா புரியவில்லை
இங்கே ஜாதியும், மதமும் இல்லையடா..
விஞ்ஞானத்தால் நாம் தூரத்தை நொடியில் நெருங்கி விட்டோம். இருந்தும்
விளக்கமில்லா காரணத்தால் நாம் இன்னும் விலகியே நிற்கிறோம்!!!!!
துணிந்து வா தமிழா, முண்டாசு கட்டிய தமிழன் நம் முன்னால் நிற்கிறான்
உடைத்தெறிவோம் ஏற்றத்தாழ்வுகளை......
தோழமை நெஞ்சங்களே...
வணக்கமும் வாழ்த்துக்களும்...
ஒரு நல்ல செய்தி....
உலகளாவிய நிலையில் நாள்தோறும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி -பக்க அளவில்.படைப்பு என்ணிக்கை அளவில் ,கருத்து மழைப் பொழிவு நிலையில் ,தமிழ் மொழி வளர்ச்சிக்கு சில ஊடகங்களே இன்று பணியாற்றி வருகின்றன...இந்நிலையில் வலைதள சேவை என்பது பெரிதும் பயன்பாட்டுக் களத்தில் பவனி வந்து அவனி முழுதும் மனிதர்களை ஒன்றிணைக்கிறது...
அன்றியும் படைப்பாளிக்கு முழு சுதந்திரம் அளித்து படைப்பு அளிப்பதில் எவ்வித தணிக்கையும் இன்றி பல வகைமைகளில் தமிழ்ச் சேவையா (...)
நல்லவை எவை? தீயவை எவை? என்பதை பிரித்தறிய கற்றுத் தந்து.,
வாழ்க்கைப் பாடத்தையும், அறிவுப் பாடத்தையும் புகட்டி .,
பல மனித வேற்றுமைகளையும், சமுதாயவேற்றுமைகளையும் களைந்து தோழர்களாய் வாழ பழகிக் கொடுத்த
பள்ளி, கல்லூரி மற்றும் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
தீராத கணக்கு
எதையோ நினைத்தபடி
எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது
சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து
பிச்சை என்று கேட்டாய்.
தெய்வமே அந்தக் குழந்தை
என்னமாய்ச் சிரித்தது....
அதற்கு மாறாக நீ என்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்
ஓரிரவில் சாக்கடையோரம்
கொசுக்கள் குதறும் வதையில்
துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி
அய்யா என யாசித்தாய்
உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது
எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது....
அதற்குப் பதில் நீ என்னை
அடித்துப் பிடுங்கியிருக்கலாம்
பஸ்ஸுக்குக் காத்திருக் (...)
நம் மனம் பல வருத்தத்தில் இருப்பினும், நம்மை சுற்றி உள்ளவர்கள் மகிச்சியுடன் இருந்தால் நாமும் மகிழ்ச்சி அடைவோம்.
இதை உங்கள் வாழ்விலும் பல இடங்களில் உணர்ந்திருப்பீர்கள். எனவே அனைவரையும் மகிழ்வியுங்கள்.....,மகிழுங்கள்.
நம் மனம் பல வருத்தத்தில் இருப்பினும், நம்மை சுற்றி உள்ளவர்கள் மகிச்சியுடன் இருந்தால் நாமும் மகிழ்ச்சி அடைவோம்.
இதை உங்கள் வாழ்விலும் பல இடங்களில் உணர்ந்திருப்பீர்கள். எனவே அனைவரையும் மகிழ்வியுங்கள்.....,மகிழுங்கள்.