வாழ்க்கை உணர்ந்தவன் கையில்-முஹம்மத் ஸர்பான்

மடிந்தால் நிரந்தர உறக்கம்
இடிந்தால் தோன்றும் குழிகள்
அடி மேல் படிகள் விழுந்தாலும்
துடிப்பை விலையாய் கேட்பார்.
இட்டவை தோள் கொடுக்கும்.
விட்டவை நிம்மதி கெடுக்கும்.
சொட்டும் மழையின் பாதை
நடக்கும் ஆற்றின் ஓடை.

பள்ளமும் வெள்ளத்தால் நிரம்பும்
உள்ளமும் கள்ளத்தால் நிறையும்.
ஆசைகள் மோசம் செய்யும்
அசைவுகள் பாவத்தின் முகங்கள்.
உலகின் நிலை பரிதாபம்
வாழும் உள்ளம் விபரிதம்,
கேட்பவை எல்லாம் கிடைத்ததில்லை
நடப்பவை யாவும் நினைத்ததில்லை.

கண்ணால் காண்பதை நம்பாதே!
விண்ணும் மண்ணில் கரையும்.
ஏழையின் குடிசை சிரிப்பு
நல்ல உள்ளத்தின் இனிப்பு.
இரவுக்கு பகல் துணைதான்
உறவுக்கு பிரிவு இணைதான்.
பிறப்பும் இறப்பும் வேறு
உணர்ந்தவன் கையில் பேறு.

ஆலயம் கடவுளின் பூட்டு
சாதியில் நடக்குது தீட்டு.
மலடியின் கருப்பை வெறும்பை
பரிகாரமாய் மிறிப்பாள் எறும்பை.
பசித்தவன் அலறல் கேட்காது
புசித்தவன் உதறல் ஓயாது,
காதல் கொள்ளும் மனங்கள்
சீதன பேச்சின் பிணங்கள்.

இலக்குகள் ஆயிரம் உண்டு
கையிலுள்ள வில்கள் நூறு.
ஆசையில் விழுந்தால் பாவம்
உணர்ந்து படித்தால் ஞானம்.
நடக்கும் பாதைகள் முடியாது
கடந்தால் துருவங்கள் ஓயாது.
மனிதனின் வாழ்க்கை பயணம்
வெறும் ஆறடி குழியில் புதையும்.

எழுதியவர் : முஹம்மத் சர்பான் (4-Sep-15, 9:56 am)
பார்வை : 510

மேலே