நெடும் பயணம்

எல்லையற்று
விரிகிறது
இலக்கியப்
பெரு வெளி
அங்கு
செல்லும்
நெடும்
பயணங்களில்
என்னை நானே
வாசித்துக்
கொள்கிறேன்.
கம்பரையும்
வள்ளுவரையும்
சந்திக்க முடிகிறது.
அவ்வையையும்
அதியமானையும்
காண முடிகிறது.
அகலிகை
கல்லாகிறாள்.
திரௌபதி
அமைதி காக்கிறாள்.
மணிமேகலை
தவம் செய்கிறாள்
சந்திரமதி
வாய்மை காக்கிறாள்
கண்ணகி
கொதிக்கிறாள்.
சூர்ப்பனகை
சூது செய்கிறாள்..
காலங்களால்
கட்டுப்படுத்தப் படாத
இப் பெரும்
பயணங்களில்
ஆதி வாசியாய்
அதி விசுவாசியாய்
ஆதிக்க வாசியாய்
பாத்திரங்கள்
ஒவ்வொன்றோடும்
மாறிப் மாறிப்
பேசிச் செல்கிறேன்..

எழுதியவர் : உமை (4-Sep-15, 9:39 am)
Tanglish : ilakkiyam
பார்வை : 440

மேலே