வெள்ளமும் வற்றலுமாய் கவி
அந்த ஏகாந்த இரவுகள் கற்பிக்கின்றன
அழகு கவிதை புணையும் சூக்குமமங்களை
கழுமமற்ற இரவு கவித் தாழ்ப்பாளைத் திறக்கிறது
செயற்கையும்
இயற்கையும்
திராணி பெறுகிறது ஓடி வரும் கவிதை அருவியில்
சங்கமிக்கிறது பேனா முனை கவியின் திவி நுழைவாயிலில்
கருப்பெற்ற கவி உருப்பெறுகிறது தாரதம்மியம் இன்றி
இரவை விடுவித்து தாமன் நுழைகிறான்
கவியின்றி பகலறுவி வீணாய் வற்றுகிறது
திகம்பரமாய் மேசை கண்ணீர் வடிக்க
மூளையும்
கடதாசியும்
வெறிச்சோடி பளுவின் நிமித்தம் களை கொள்கிறது
ஓசை நிறைந்த ஒட்டு மொத்த பகல்வெளியில்
கவிக் கருக்கள் தானாக களைந்து கொள்ள
*********************************************************************
சூக்குமம் = நுண்மை
திவி =சுவர்க்கம்
கழுமம் = குற்றம்
தாமன் = சூரியன்
திகம்பரம் =அம்மணம்
தாரதம்மியம் =ஏற்றத் தாழ்வு
******************************************************************