பொருத்தமான துணை
உங்களுக்கு பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்க இங்கே வாருங்கள் என்ற பெரிய விளம்பர பலகை ஒரு அடுக்கு மாடி வளாகத்தில் வைக்கப்பட்டு இருக்க, அதை பார்த்த கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொரு மாடியிலும், ஒரு குறிப்பிட்ட விதமான ஆண்கள் இருப்பார்கள்.அவர்களில் உங்களுக்கு பொருத்தமானவர்களை நீங்க தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
நீங்க ஒவ்வொரு தளமாக மேலே ஏறி போகலாம். ஆனால் ஆறாவது தளத்தில் இருந்து திரும்பி நீங்க கீழே வந்து தேர்வு செய்ய முடியாது. அப்படியே வெளியேற வேண்டியது தான்.
முதலாவது தளத்தில் ஒரு பலகை. இங்கே அழகானவர்கள் இருக்கிறார்கள்!
பலர் அடுத்த தளத்தை நோக்கி நடந்தார்கள்...
இரண்டாவது தளம் - இங்கே அழகும் பணமும் உடையவர்கள் இருக்கிறார்கள்...
மூன்றாம் தளம், இங்கே அழகு + பணம் + அறிவு உடையவர்கள் கிடைப்பார்கள்
நான்காம் தளம் அழகு + பணம் + அறிவு + குடும்ப பொறுப்பு உடையவர்கள் இருக்கிறார்கள்...
ஐந்தாம் தளம் - அழகு + பணம் + அறிவு + குடும்ப பொறுப்பு+ அன்பு உடையவர்கள் இருக்கிறார்கள்...
ஆறாவது தளத்தில் இருந்த தகவல் பலகை சொன்ன வாசகம்.இங்கே யாரும் இல்லை.