கிராமத்து காதல்
தனிமையிலே
பாதையில்
போகையிலே
என்னை
உரசிச்செல்லும் சுவாசக்
காற்றாக வந்து
என்னுள் கலந்தவனே
உன்னொடு
சுவாசமாக கரைந்தேனே,....
என் இதயத்தில்
வஞ்சமாய்
வந்து புகுந்து
கொய்தவனே
பனிக்கட்டி போல
என்னை கரைப்பவனே
உன்னை அறியாமல்
புரியாமல்
அலைமோதுகின்றேனே.
ஆத்தங்கரை ஓரம்
தண்ணீர்குடம்
எடுக்க போகையிலே
மாமா நீங்க பாதி வழி
வருகையிலே
பாழாப் போன மனம்
சொக்கி தான் தவிக்கையிலே
பட்டனம் போக பயணம்
தான் சொன்னாயோ!
நாட்களும் கடந்து
போய் நீ
வீடு வந்த
சேதியை
நான் கேட்டேனே!
ஓடோடி வந்து
உன்னை நான் பார்க்கையிலே
என்னை பார்க்காமல்
நீ போகையிலே
ஊசி தேய்வது
போல நான் தேய்கையிலே
பார்த்தும் பாராமல்
போகிறாயோ!
இதயம் சுக்கு நூராய் உருகுடைந்து
வந்தேனே!
காதலர்கள் போகையிலே
கோடி சொப்பனங்கள் நான் காண்கையில்
தேடி வந்து
கலைத்து
என்னை விட்டு விட்டு
செல்கிறியே!
பொட்டு வச்சி
பூவச்சி
வலையல் போட்டு
பட்டு உடுத்தி நான்
நிற்கையிலே
பட்டணத்துப் பெண்ணை
தேடுறியே
அவள் உன்னை விட்டு
சென்றாலும்
உன்னொடு வருவேனே நிழலாக உன்னோடு..,
உன்னோடு வாழ ஆசையிலே
உனக்காக காத்து கிடக்கிறேனே காராமத்து மண்ணிலே!!