வலிக்கிறது

வலிக்கிறது...
ஏதோ ஒரு மூலையில்
இலேசாய் இரத்தம்
சொட்ட...
பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட
சிறு துகளைப் போல
உறுத்திக் கொண்டே...
ஓடி விழுந்தெழுந்த போது
கோடாய் தெரிந்த
சிராய்ப்பை போல
எரிந்து கொண்டே...
பனியால் வெடித்துக்
கிடக்கும் பாதத்தைப் போல
முட்கள் முட்களாய்
குத்திக் கொண்டே...
கிழிந்து போன தோலைப் போல
மெது மெதுவாய்
விரிந்து கொண்டே...
நகக்கண் பிரிவதைப் போல
உயிர் தெரித்துக் கொண்டே...
எங்கோ வலிக்கிறது...
எதுவோ வலிக்கிறது...
என்ன ஏதென்று
தெரியாமலேயே
வலி வாங்கிக் கொள்கிறேன்...
திரும்பக் கொடுக்கும்
உத்தேசமில்லா
ஓர் கடன்காரியாய் !!

எழுதியவர் : யுவபாரதி (11-Feb-14, 8:25 pm)
Tanglish : valikkirathu
பார்வை : 138

மேலே