காதலென்னும் சோலையினில்55

கவிதாவும் ராஜாவும் தாராவின் வீட்டிலிருந்து கிளம்பி அந்த அதிகாரியின் வீட்டிற்கு வந்தார்கள் அவரை காணாததால் சற்று மனவருத்தமடைந்தனர் இருவரும்.................


அப்பொழுது கவிதா ராஜாவிடம் "என்னங்க நடந்த விபரத்தை எல்லாம் பிரசாத்திடம் சொல்லலாம் என நினைத்தேன்; ஆனால்! இந்த நேரம் பார்த்து அவனுடைய போனும் வேலை செய்யவில்லை என்ன பண்றது" என்றாள்.



அவரிடம் இப்பொழுது எதுவும் சொல்லவேண்டாம் ராஜலெக்ஷ்மி கிடைத்த பிறகு தெளிவாய் புரியவைக்கலாம் பாவம் அவருக்கும் அதிக பளு இருக்கும் இந்த நேரம் போய் இதை சொல்லி கஷ்டபடுத்த வேண்டாம் என்று ராஜா சொன்னான்.



சரி!பிரசாத் எப்போ வாரேன்னு சொன்னாரு என்று ராஜா கேட்க?


சீக்கிரம் வந்திருவான் இன்னும் 2,3 நாட்களில் அவனுடைய வேலைகளெல்லாம் முடிச்சிட்டு அப்புறம் உடனே கிளம்பி வாரேன்னு சொல்லிருக்கான் அதுவரைக்கும் சித்தப்பா, சித்தி அதுவரைக்கும் இங்கே இருக்கட்டும் என்று சொன்னான்............



அதுமட்டுமில்லைங்க அவன் நமது முகவரி கேட்டான் அதற்குள் லைன் கட் ஆனது அப்புறம் நான் அழைப்புக்கொடுக்கும் போது அனைத்து வைக்கப்பட்டுள்ளதுன்னு பதில் வந்திச்சி அதன்பிறகு எந்த தகவலும் இல்லை என்று கவிதா சொல்லி முடித்தாள்............



பேசிக்கொண்டே அந்த அதிகாரிக்காக காத்துக்கொண்டிருந்தனர் இருவரும்???????????


இன்னொருபுறம் அந்த அதிகாரி அந்த பழைய கட்டிடத்திற்குள் சென்றதும் அந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ந்து தான் போனார் அந்த அதிகாரி!!!



அங்கிருந்து ஓடி வந்த அந்த பெண்ணின் வாயில் ஒரு துணியை நீட்டமாக கொடுத்து அதிலிருந்த ஒரு இரும்பு கம்பி போன்ற அமைப்பில் கட்டி வைத்ததுமட்டுமில்லாமல் அவளது ஆடைகளையும் களைந்து அலங்கோலப்படுத்தியிருநதனர்............



இவரை பார்த்ததும் அந்த பெண் அழுது கொண்டே தனது உடலையும் கைகளால் மறைத்து குனிந்து ம்...ம்.......வராதீர்கள் என்று வாயால் சொல்லமுடியாமல் ஜாடையால் சொல்லி அழுது கொண்டிருந்தாள்..............



அவளது வேதனை இந்த அதிகாரிக்கு புரிந்தது இருந்தாலும் வேறு வழியில்லாமல் தனது கண்கள் தரையை பார்த்துக்கொண்டிருக்க அவள் பக்கத்தில் சென்றார்!!!!!!



அப்பொழுது நிமிர்ந்து பார்த்த அவள் அந்த அழுகையிலும் தலையை ஆட்டி வராதீர்கள்; என்பது போல் சொல்லி உணர்த்த பார்த்தாள்! ஆனால் இவர் பக்கத்தில் சென்று கொண்டிருக்க! அவள் தனது கண்களால் வேறு ஒரு திசையை நோக்கி அங்கு, அங்கு என்பது போல் கண்ணை காட்டினாள்.......




உடனே அந்த அதிகாரி அந்த பக்கம் போய் பார்க்கும் போது இந்த பெண்ணின் ஆடை கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அதை பார்த்த அவர் அதை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு அந்த கட்டையும் அவிழ்த்து விட்டார்.............



அந்த ஆடையை போர்த்திக்கொண்டவள் அழ ஆரம்பித்தாள்..........


இவரால் அவளை தேற்றவும் முடியாமல் என்ன சொல்வதென்று புரியாத வண்ணம் நின்றார் ஏனென்றால் அவள் அழுகையை தவிர வேறு பதில் தற்பொழுது கொடுக்க போவதாக தெரியவில்லை அவருக்கு................



சற்று நேர அமைதிக்கு பின் அழுது நடுங்கிய நிலையில் இருந்த அவளிடம்;;; பயப்படவேண்டாம் நான் ஒரு போலிஸ் அதிகாரி தான் உங்களை ஒருவன் துரத்தி வரும் போது எவ்வளவோ! நிற்க சொல்லியும் நிற்கவில்லை, துரத்தி வந்தவன் சென்ற பிறகும் இந்த சிறிது நேரத்திற்குள் இந்த நிலைக்கு காரணம் என்ன? என்று கேட்டார்???



பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள்.


சரி! உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது யார்? என்னிடம் வந்த ஒரு புகாரின் பேரில் விசாரிக்க செல்லும் போதுதான் உங்களை இந்த நிலைமையில் பார்த்தேன் மறைக்காமல் உண்மையை சொல்லுங்கள் பத்திரமாக சேர்க்கிறேன்,



உங்கள் அண்ணனுடைய திருமணத்தின் போது கோவிலில் வைத்து காணாமல் போன அந்த பெண் தானே நீங்கள்?என்று கேட்டார்!!!!!!!!!!!


ஆம்! என்று சொன்னவள் தன்னையும் மீறி அழ ஆரம்பித்தாள், நான் காணாமல் போகவில்லை என்னை கடத்தி சென்றார்கள் என்று சொல்லிஅழுது கொண்டிருந்தவள் திடீரென தனது பக்கத்திலிருந்த ஒரு கண்ணாடியால் தனது வயிற்றில் குத்தி தற்கொலை செய்ய முற்பட்டாள்??????






தொடரும்...............

எழுதியவர் : (12-Feb-14, 3:21 pm)
பார்வை : 288

மேலே