நிலாப்பெண்ணே
உன் பெயர்
எழுதா பேனா
வார்த்தை பேசா
ஊமை என்பேன்...
நின் உருவம்
இல்லா ஓவியம்
உயிரோட்டம் இல்லா
வாழ்வு என்பேன்...
நின் பெயர்
இல்லா கவிதை
வாய்மை மொழியா
புலமை என்பேன்...
நின்னைத்தொடா
மேகத்தை நான்
வார்த்தையில்லா
வாக்கியம் என்பேன்...
நீயில்லா காதல் கூட
சிறகுகள் இல்லா
பறவை என்பேன்...
நீயில்லா சோகம் கூட
அமைதியில்லா
பூமி என்பேன்...