காதலெனும் சோலையிலே

காதலெனும் சோலையிலே
பாடி வந்த பைங்கிளியே
காதலெனும் வானிலே
ஆடி நின்ற வெண்ணிலவே

காதலெனும் வீதியிலே
காத்திருந்த பூமரமே
காதலெனும் பூச்செடியில்
பூத்துவந்த முதல் பூவே!!!

காலம் வந்ததுவே
நீயும் நானும்
கல்யாணம் கோலம்
கண்டு மகிழ!!!

எந்த வானில்
நீ ஒரு வானவில்
அதன் வண்ணங்களாய்
நான்!!!

எந்த வாழ்வின்
வசந்தம் நீ
மலர்ச்சோலையாய்
நான் !!!

எங்கிருந்தோ
வந்தவனே
என்னை
முழுமையாய்
அள்ளி சென்றாய்!!!!

எண்ணி பார்த்தே
வியந்து போனேன் !!!
எனக்குள் நீ!!!
எனக்குள் நீ !!
என்றும்
எனக்குள் நீ !

நீ நானாக
நான் நீயாக !!

நாம் ஆனோம்
காதலாக!!!!


"இனிய காதலர் தின வாழ்த்துக்கள் "


நிலா***********************

எழுதியவர் : நிலா மகள் (14-Feb-14, 10:37 am)
பார்வை : 146

மேலே