காதல் இனிக்கும்
கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்றேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஓன்று தானே கற்று வீசும் வரை
வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ணப் பூப்பூக்கலாம்
வாசல் இல்லாமலே தென்றல் வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா