oormila - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : oormila |
இடம் | : |
பிறந்த தேதி | : 31-Dec-1903 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 201 |
புள்ளி | : 28 |
தொலைந்து விட்டேன் என்று நினைத்தால் ,
தொடுவானத்தில் நிக்கிறது என்னுடைய விழிகள். ...
தேடும் வரை வலியிருக்கும் ,
அதில் தேறிவிட்டால்...,
நமக்கான கடமைகள் காத்திருக்கும் ......,
அதன் பயணம்தான் எல்லோருடைய வாழ்க்கையும் நிர்நிக்கும்....,
அவ்வாறே நானும் பயணிக்கிறேன்....,
பாதைகள் எதுவரை என்று தெரியாது,
அதுவரை என் கடமைகள் ஓயாது....,,
கற்பழித்துக் கொல்லப்பட்ட
இளம்பெண்ணின்
உடல்காயங்களை
உற்று நோக்கியதுண்டா?
பாலியல் பலாத்காரத்தால்
இறந்து போன சிறுமியின்
இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொண்டதுண்டா?
திருமணத்தைக் காணாத
முதிர்கன்னியின்
முக'வரி'களின்
அர்த்தம் படித்ததுண்டா?
விவாகரத்து கூட தராமல்
வெட்டிவிடப்பட்ட அபலைகள்
அனுபவிக்கும் தனிமையின்
கொடுமையை சிந்தித்ததுண்டா?
மாமியார்களால் கொளுத்தப்பட்ட
மருமகள்களின் கருகிய
உடலின் சூட்டை விரலால்
தொட்டுணர் ந்ததுண்டா?
காமுகர்களால் தூண்டிலிடப்படும்
இளம் விதவையின்
இதய அறைக்குள்
என்றாவது எட்டிப்பார்ததுண்டா?
பெண்கள்தான் பெண்களுக்கு
முதல் எதிரியெ
கற்புக்குட விலை உண்டு
ஆனால் கண்ணீருக்கு கிடையாது
வலிதான் இருக்கும்
கற்பனையில் காணும் கடவுள்
நம்பிக்கையின் ஒளிவடிவம்தான்
நம்மிக்கை இழந்தால்
கண்ணுக்கு தெரியும் கல்லாகத்தான்
அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்...
காமதத்தை கடந்த காதலும்
கர்வத்தை உடைத்தெறியும் அன்பும்
இருக்கும் ஒவ்வொருக்கும்
புரியும்
இந்த உலகில் நாமும் ,மற்றவரும்
மனிதர்கள்தான்
நடமாடும் மிருகம்மல்ல என்று .....
கற்பனையின் கருவறை பிறந்துகொண்டே இருக்கும்
அதில்
கவிதைகள் ஆயிரம் விளைச்சல் இருக்கும் ...,
காவியங்கள் பல மணம் விசும்,
சொற்பனைகள் கலந்த கவிகள் இனிக்கும்
விற்பனைகள் பல விலைகள் பேசும்
இதில்
அவர் அவர் வலிகள் கொண்ட வார்த்தைகள் மட்டும்
என்றென்றும்
முகம் காட்டும் கல்லறைகள்.....,
வானத்தின் பார்வைவில்
நாம்மெல்லாம் பூமியில் புதைக்கப்பட்ட ஒரு புள்ளி
அதுவே ,
பூமியின் பார்வையில்
வானம் ஒரு நமக்கான திறந்து விடப்பட்ட கதவு...
அதில்
பாதைகள் முடிவதும்மில்லை...,
பயணங்கள் நிற்பதும்மில்லை.....,
தொடர்ச்சியே............!
விழிகள் அசைந்தாடும்,
உணர்வுகள் பேசும்போது .....,
பாதைகள் மறந்து போகும்,
காதலில் நனைந்த போது....,
கைவிரல்கள் விளையாடும்,
இசையினில் உருகும்போது.....,
மொழிகள்ளோடு நாணமாகும்,
மௌனங்கள் நடனமாடும் போது...,