கல்லுரி பயணம்
என் நினைவில் நிறைந்த நிறையான அழகே
என்றும் உன் நினைவில் நான் இருப்பேன்
உன்னோடு பயணித்த கல்லுரி பயணம்
நெஞ்சோடு என்றும் இனிக்கும்
உன்னோடு நான் கொண்ட சொந்தம் இது
இது தொப்புள்கொடி வழிவந்த சொந்தமில்லை
இது உறவினில் முளைத்த உறவுமில்லை
இது மஞ்சள் கயிர் கட்டிவந்த பந்தமில்லை
உன்னோடு நான் கொண்ட சொந்தம் இது
ஒரு நாளும் சாகாத நட்பு இது
இனி நான் செல்லும் பாதைதனில் என்றேனும்
உன்னை காணும் தருணம் எதிர்பார்த்து
காத்திருப்பேன்.