நவீன திருமணம்
ஆணும் பெண்ணும் இந்தியராம் !
ஐ.டி.துறையில் ...
ஆண் அமெரிக்காவில்
பெண் லண்டனில்
நிறுவனத்தில் பணியாம்!
நெட் சாட்டில் இருவர்க்கும் சம்மதமாம்!
இருவீட்டார் கூடி நிச்சயமாம்!
ஐனூரு பவுன் ஐந்து கோடி
மனவீட்டார்க்கு சம்மதமாம்!
வேறேதும் வேண்டாம் சீர் சிரத்தை
மணமகன் வீட்டார் சொன்னாரே!
மணமகள் வீட்டார் மருத்தாறே!
முறையை நாங்கள் செய்கின்றோம்
வேண்டாமென்றால் அது குறையே!
மகனை சாட்டில் அழைத்தார் தந்தை!
மகனும் கூட சொன்னானே!
பாத்திர பண்டம் வேண்டா!
பார்த்திட டி.வி திரையும் வேண்டாம்!!
கட்டில் மெத்தையும் வேண்டாம்!
காரும் வேண்டா பைக்கும் வேண்டாம்!!
வீட்டினில் வைக்கும் பிரிஜ் வேண்டாம்!
வாசிங் மெசினும் மிக்ஸ்சி கிரெண்டர்
எதுவும் வேண்டாம்!!
மணப்பெண் வீட்டார் அடம்பிடிக்க!
மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்க!
உங்கள் வசதிக்கு...
பொருளாய் வேண்டாம் பணமாய்
தாருங்கள் என்றனரே!
கல்யாண வைபவம் கலைகட்ட
சம்பிரதாய முறைப்படி நடக்குதப்பா!
மாப்பிளை அமெரிக்காவில்!
பெண்பிள்ளை லண்டன் நகரில்!
விடுப்பு என்பதே கிடையாது!
ஆனாலும் திருமணம் நடக்குமப்பா!!
பத்திரிக்கை உறவினருக்கு
நேரினில் குடுக்க நேரம்மில்லை!
தொலைபேசியில் சொன்னாலும் தொல்லையப்பா!!
இருக்கவே இருக்கு இ-மெயில்
உறவினர் அனைவருக்கும்
அழைப்பிதழ் பறக்குதப்பா!
சம்பிரதாய முறைப்படி
அழைப்பிதழ் இருக்குதப்பா!!
வைத்த பணத்தை வசூல் செய்ய
அழைப்பிதல் அவசியமப்பா!
அனைவரும் குழுமிடவே
மண்டபங்கள் பிடிக்குத்தப்பா!!
நிறைய உறவுகள் உலகில்
வந்து போக நேரமில்லை!
பத்திரிகையில் பக்காவாக
வங்கி கணக்கென் இருக்குதப்பா!!
மாநகருக்கு ஒன்றாக
மண்டபம் பிடிக்குத்தப்பா!
மண்டபத்தின் விபரமெல்லாம்
பத்திரிக்கையில் இருக்குதப்பா !!
வாழைமரம் தோரணங்கள்
ப்ளெக்ஸ் போர்டு கட்-அவுட்ட்டாக
வாயிலில் ஜொலிக்குதப்பா !!
வசதிகள் இருக்கு சிரத்தை எடுக்க யாருமில்லை!
அனைவரும் கூடினர்
அவரவர் மண்டபத்தில் !
மணமக்கள் இல்லையப்பா!
மனமேடை ஜொலிக்குதப்பா!!
அகண்ட திரை தெரியுதப்பா!
ஏ.சியில் நறுமணம் வீசுதப்பா!
சாஸ்திரிகள் யாகம் வளர்க்க
சம்பிரதயபடி நடக்குதப்பா !!
திரையில் ஒளி தெரியுதப்பா!
கெட்டி மேளமும் சத்தமாய்
சி.டியில் கேக்குத்தப்பா!!
மணமக்கள் இருவருமே
திரையினில் தோன்றுதப்பா!!
இருகரம் கூப்பி வணங்குதப்பா!!
இன்டெர்நெட் உலகமப்பா!
சேட்டிலைட் நேரடி தெரியுதப்பா!!
குழுமி இருந்த கூட்டமெல்லாம்
கரகோஷம் செய்தப்பா!!
பத்தரைக்கு முகூர்தமாம்!
மாப்பிள்ளை எட்டரைக்கு எழுந்து
விமானத்தில் லண்டன்
நோக்கி பறந்தானாம்!!
பத்து மணிக்கு காணொளி காட்சிமுன் !
யாகம் ஓசை முடிவினிலே
கட்டினான் தாலி கழுத்தினிலே!
அழகாய் முடிந்தது திருமணமும்...!
இருவீட்டார் உறவினரும்
வாழ்த்துதல் சொன்னார் சாட்டினிலே!
நேரம் இல்லா காரணத்தால்
உணவுகள் சென்றது கூரியரிலே !
வங்கி கணக்கில் மொய்பணமும்
வந்தே விழுந்தது !
அனைவருக்கும் அன்பளிப்பாய்
கிப்ட் கூப்பன் ஆன்லைனில் பறக்குதப்பா!
வாயபிளந்து பார்க்காதே !
வருங்காலத்தில் நடக்கும் நீ காண்பாய்!!