புத்துயிர் பெற்ற செய்தியை சொல்வாயா....

போதைக்கும்,புகைக்கும் மனதை
பறிகொடுத்திருக்கும் என் பூந்தளிர்களுக்கு,
எப்படி சொல்லி புரிய வைப்பேன்...
உற்சாகம் என்று சொல்லி
உங்கள் உயிரை பறிக்கப் போகிறான்...
மகிழ்ச்சி என்று சொல்லி
உங்களுக்கு மரண தேதி குறிக்க போகிறான்...

காலம செய்த கோலத்திலே,
நான் செய்த குற்றத்திலே,
நரகவலிகளோடு தினம் தினம்
செத்துக்கொண்டே சாகிறேன்...

வர்த்தையில வலிய சொல்ல தெரியல..
வாழவும் வழி எனக்கில்ல...
கடவுளும் என்னை வாழ வைக்கல..
காலனும் என்னை கூட்டிச் செல்லலே..

நரம்பாடு காலும் கையும் இழுக்குதது...
உள்நாக்கும் இங்கே உள்ள தள்ளுது...
படுக்கையில புரண்டு படுக்க துடிக்குது..
என் முதுகுவடமொ அதை தடுக்குது..
உள்ளமோ எதோ சொல்ல துடிக்குது..
உதடும் சொல்ல மறுக்குது...
கையும் எதோ எழுத நினைக்குது..
விரலும் அங்க நடுங்குது...
.
.
.
போதைக்கும்,புகைக்கும் நரபலி
கொடுக்கும் கடைசி உயிர் நானாக
மட்டும் இருக்கட்டும்....
போதைக்கும்,புகைக்கும் உன்னை விற்று விட்டு
வளமான எதிகாலத்தை
வறண்ட கால நரகமாக்கி விடாதே...
.
.
.
நண்பர்களே...
என் புற்று உயிர் போகும் முன்,
என் பூந்தளிர்கள்
புத்துயிர் பெற்ற செய்தியை சொல்வாயா....

என் மரணனத்தை நோக்கிய
என் மனதிற்கு மகிழ்ச்சியை தருவாயா.....

எழுதியவர் : kalai (12-Feb-11, 2:29 pm)
சேர்த்தது : kalai
பார்வை : 417

மேலே