திருமண வாழ்வில் எந்த இடத்தில்

திருமண வாழ்வில் எந்த இடத்தில் ...?
************************************

ஒருவர் தொலை பேசியில் மனைவியிடம் பேசுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

* தொலைபேசியில் பேசும் போது அதிகம் தான் பேசாமல் அடிக்கடி உம்...ஆமா ...உம் ..என்று அடிக்கடி மில்லிய சிரிப்பும் சிரித்தால் மச்சி இப்பதான்..."யாருக்கோ நிச்சயம் பண்ணியிருக்கு" என்று அர்த்தம் ..

* என்ன டார்லிங் இவளவு நேரம் ஏன் ..? போன் பண்ண‌ல ..என்றால் திருமணம் ஆகி ஒருமாதம்.

*சாரிடா செல்லம்... டைம் கிடைக்கல. ஒரே பிசி...என்றால் திருமணம் ஆகி ஒரு வருடம் ..

*வீட்டில் இருந்து வெளியேறும் போது மனைவியிடம், இன்று நான் உனக்கு போன் பண்ண மாட்டன் ஏன்னா ..? மீட்டிங் இருக்கு ..என்று சொன்னால் திருமணம் ஆகி ஒரு இரண்டு | மூன்று வருடம் ....

*மனைவி "போன்" செய்தால்... என்ன ..? இப்ப ஏன் போன் பண்ணின‌ ..? வீட்டுக்குதான‌ வருவேன்...செத்தாபோயிடுவன் என்ன அவசரம் ...?
என்று கத்தினா திருமணம் ஆகி ஐந்து |ஆறு வருடம் ..

*அங்கேயிருந்தும் போன் வர்றதில்லை... இங்கேயிருந்தும் போன் போறதில்லை... அப்படின்னா வருடம் 10க்கு மேல.

....

எழுதியவர் : முரளிதரன் (17-Feb-14, 8:47 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 159

சிறந்த நகைச்சுவைகள்

மேலே