ஈரோடு தமிழன்பன் நூல்கள் பெயரில் ஒரு படைப்பு

இது தேம்ஸ் நதியில் 1
தோணி வருகிறது 2
தேன் தமிழ் அலை3களோடு
நிலா வரும் நேரம்4

வணக்கம் வள்ளுவ 5என்று சொல்லி
காலத்திற்கு ஒரு நாள் முந்தி 6
ஒரு வண்டி சென்ரியு 7நிரப்பி
இவர்களோடும் இவற்றோடும் 8
மின்னல் உறங்கும் போது9
பனிபெய்யும் பகலில் 10
மூன்று பெயர்களும் என் முகவரி புத்தகமும்11 தாங்கி
வார்த்தைகள் கேட்ட வரத்தோடு 12
விடியல் விழுதுகளோடு 13
கிழக்குச்சாளரம் 14 வழியே
அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சத்தொடு 15
கருவறையில் இருந்து ஒரு குரல் 16கேட்டு
குடை ராட்டினத்தில் 17
மின்மினிக்காடு 18பாதையில்
கனாக்காணும் வினாக்களோடும்19
தமிழன்பன் கவிதைகள்20 வாரி
உன் வீட்டிற்கு வந்திருந்தேன் வால்ட் விட்மன். 21

கண்ணுக்கு வெளியே சில கனாக்களோடு 22
இரவுப்பாடகன் 23
சென்னிமலை கிளியோபாற்றாக்களோடு24
கவின் குறு நூறு 25வாரி
சூரியப் பிறையாய் 26
கஜல் பிறையாய் 27
ஓர் தமிழோவியமாய் 28
நாம் இருக்கும் நாடு நோக்கி 29
ஊமை வெயிலில் 30
நடை மாறிய நதியும் திசை மாறிய ஓடையும் 31நீங்கி
ஊர் சுற்றி வந்த ஓசையாய் 32
என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ்செடி அருகில் 33
மழை மொக்குகள் ஏந்தி34
கதவைத் தட்டிய பழைய காதலி தேடி .35

என்னருமை ஈழமே 36
கண்கள் கடந்த காகித வீதிகளில் 37
கதை முடியவில்லை 38



தோழமைகளே ....எனது ஞானத்தந்தை ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ள நூல்களின் பெயரில் அமைந்த படைப்பு இது.....சில நூல்கள் விடுப்பட்டுள்ளன...

அகன்
=============================================
சிலிர்ப்புகள் பழகி
மரத்துப் போய்க்கிடக்கும்
தொலைக்காட்சித் திரைகள்....
கனாக்காணும்
வினாக்களோடு...
திரும்பிவந்தாத் தேவலாம்
என்கிறது .... இந்த
வள்ளுவப் பேரனைப் பார்த்து...!!

இவர்களோடும் இரவோடுமாய்
சில
நட்சத்திரப் பாக்களும்
உருகியொளிர்ந்து வாழ்த்துகிறது
உறங்கும் மின்னல்களை
உசுப்பிவிட்டுக் கவிபாட.....!!!

பூக்கள் மட்டுமே
பொழிகிறது ... கண்ணுக்கு வெளியே
கனாக்களாய் விரியும்
நாடி மறந்த நதிகள்...!!
இடையில்
தீக்கல்லும் வீசிப் பொசுக்கியோடும்
திசை மறந்த ஓடைகள்...!!!

எண்ணிக்கை எண்பதிலும்
இளமை ததும்பும்
எழுபது...!!
மதிப்பேடுகள் என்பது
பதிப்பேடுகளுக்கு மட்டும்...!!
படித்து இன்புறும்
எங்களுக்கல்ல...!!!

வாழ்த்தக் கிடைத்த
வார்த்தைகள்
கேட்டிருக்கவில்லை வரம்..
கிடைத்திருக்கிறது
வரம்..!!!

வாழிய நூறாண்டு
வணங்கிப் போற்றுவோம்
பல்லாண்டு...!!!

ஐயா அவர்களின் சில நூல் தலைப்புகளை மட்டும் வைத்து ஒரு வாழ்த்துப்பா எழுதி அனுப்பியிருக்கிறேன்...எப்படி இருக்கிறது என்று
தெரியவில்லை... குறைகள் இருப்பின் மன்னிக்க..!!
பரவாயில்லை ரகத்தில் இருந்தால் தங்கள் மேலான கருத்துக்களை வேண்டி...

என்றும் நன்றியுடன்
சரவணா....!! - சரவணா

எழுதியவர் : அகன்-சரவணா (17-Feb-14, 10:03 pm)
பார்வை : 495

மேலே