பசுமை நிறைந்த இயற்கை
தவழ்ந்து
செல்லும் நதிகள்
தடுமாறி
செல்லும் அலைகளை
தாங்கி பிடித்து
சென்றது...
வட்டமிடும்
பறவைகள் தனது
தாகத்தை
தணிக்க - நீரோடையின்
வருகையை
எதிர்பாத்து
காத்திருந்தது...
நூல் இலை
மறைவாக மாலை
பொழுதுகள்...
சூரியனின்
அனுமதியை
நாடி - வெகுநேரமாக
எதிர்பார்த்து
இருந்தது...
நிலவின்
வருகையும் இரவின்
தொடர்ச்சியும்...
பனிபடர்ந்த
மேகத்தை அழைத்து
செல்ல
அனுமதி
கேட்டு நின்றது..
எத்தனை
நகர்வுகள் எத்தனை
நிகழ்வுகள்...
முடிவில்லாத
தொடராக
வாழ்கிறது - வாழ
செய்கிறது...
இந்த பசுமை
நிறைந்த அழகிய
இயற்கை...