காதலுக்கு பல பரிணாமங்கள்
சேயின் முதல் அழுகுரலைக்
கேட்கத் துடிக்கும்
தாயின் தவிப்பு - "காதல் "........!
பிள்ளையின் சிறுநீர் கழிப்பிற்கும்
சிணுங்காத அன்புத்
தந்தையின் அணைப்பு - "காதல் "........!
எட்டி உதைத்து ஆடியும்
விட்டுப் பிரியாத
அண்ணன் - தங்கை கைகோர்ப்பு - "காதல் "........!
மண்ணில் சிந்திய உதிரம் காயுமுன்
என் உடல் சேரத் துடிக்கும்
நண்பனின் உதிரம் - "காதல்" .......!
இன மதம் புதைத்து புது உலகம் படைக்க
மறுமலரத் தோன்றும்
ஆண் - பெண் இணைப்பு - "காதல்" .......!
கண்டெடுத்த பொருளின்
முகவரி தேடிக் கொடுக்கும்
மனிதநேயம் - "காதல்" .......!
காமக் கண்ணாடிகள் தளர்ந்த போதிலும்
இடம் கொடுக்கும்
கணவன் - மனைவி தோள்கள் - "காதல்" .......!
தான் இட்ட நெருப்பு தன் தந்தையை
சுட்ட போதிலும் அதை அணைக்கத் துடிக்கும்
மகனின் கண்ணீர்த் துளிகள் - "காதல்" .......!
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையே ஒரு வெற்றிடம் ________ ?
அதுவே - "காதல்" .......!
அதனால்தான் என்னவோ
காதலுக்குப் பல பரிணாமங்கள்
இப்படி .......,
அன்பு .....!
கடவுள் .....!
இயற்கை .....!