ஒரு துயரத்தின் ஆட்சி
ஒரு மொழி
இறந்து கொண்டிருக்கிறது..
ஒரு இனம்
அழிந்து கொண்டிருக்கிறது..
ஒரு வரலாறு
முடிந்து கொண்டிருக்கிறது..
ஒரு அனுபவம்
சிதைந்து கொண்டிருக்கிறது..
ஒரு உயிர்
துயரங்களால் பின்னப்பட்டிருக்கிறது..
ஒரே உலகமும்
வெடித்துச் சிதற இருக்கிறது..
தேடுதலின்மையும்
புறக்கணிப்பும்
அக்கறையின்மையும்
வலிகளைச் சுமக்கப்பழக்கும்
வார்த்தை ஜாலங்களும்
கூட்டணி சேர்ந்து
நிகழ்த்திவிட்டன
அந்த கொடூர சம்பவத்தை..
ஒரு துயரம்
ஆட்சி பீடமேறிவிட்டது..