பூக்களின் போராட்டங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
என்
கண்ணீர் சில சமயம்
கவிதையாக மட்டுமல்ல....
காட்சியாகவும் வெளிப்படும்....
இதோ.....
புரிந்தும் புரியாமல் போராடும்
பூட்டி வைத்த மகரந்தங்கள்......
இவர்களை சுற்றிப் பாதுகாப்பு - எனினும்
இறைவனே
இவர்களை நல்லபடி நீ காப்பாற்று....
மனித உருவில் பல மிருகங்கள்
பால் வேற்றுமையின்றி இந்தப்
பாரினில் உலவுகின்றன