இதுவா சந்தோசம் -
![](https://eluthu.com/images/loading.gif)
பருக்கைகளே
பலரின்
பசி ஆற்றுகிறது......
எச்சில் இலைகளே
இவர்களுக்கு
அமுத சுரபியாய்....
தின்றது போக மிஞ்சியதை
தெருவில் கொட்டி விட்டு
திரும்பிப் பார்த்தேன்....
உடல் நலக் குறைவால் ஐயா
தருமம் என்று கத்த இயலாத ஒரு சிறுமி
பசியால் வாடி
கண்கள் மூடி எழ முடியாமல் கிடந்தாள்.......
பார்த்தபடியே என்
வீட்டிற்குள் ஓடிச்சென்று என்
குழந்தையை சத்தம் போட்டேன்
அதிகமா திங்காதேன்னா கேக்குறியா
இந்தா பாரு ஒரே வாமிட்டு......
ஆசுவாசப் படுத்தி குழந்தையை உறங்க வைத்து
அமைதியாக அமர்ந்து சிந்தித்தேன்......
ஒரு நொடி.....
வெயிலில் வதங்கி பசியால்
ரோட்டில் கிடந்த அந்த குழந்தை நினைவுக்கு வர..
எழ முயன்றேன்.......
என் மனிதாபிமானத்தை
கொள்ளை அடித்தது சட்டென்று
தொலைக் காட்சி சீரியல்......
எல்லாவற்றையும் மறந்து அப்படியே
அமர்ந்து விட்டேன்.......
சந்தோசமாக என் பொழுதுகள் போய்க்கொண்டே இருந்தது